மிகப்பெரிய ஆளுமையை இழக்கிறதா பாஜக?! உற்சாகத்தில் திமுக! கட்சி மாறுவதன் பின்னணி!  - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் மூத்த தலைவர் எஸ் கே வேதரத்தினம் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சார்ந்தவர் எஸ் கே வேதரத்தினம். திமுகவில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தவர். அசைக்க முடியாத சொந்த பலத்துடன் இருந்தார். மேலும் மக்கள் செல்வாக்கையும் பெற்றிருந்ததால் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996 2001 2006 என மூன்று முறையும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார் வேதரத்தினம்.

மீண்டும்  2011 ஆம் ஆண்டு திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட சீட் கேட்க ஆனால் அந்த தொகுதியை அப்போது கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு விட்டுக் கொடுக்கப் பட்டது. இதனையடுத்து அவர் சுயேட்சையாக போட்டியிட்டு கூட்டணியில் போட்டியிட்ட பாமக  வேட்பாளரை விட அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். கட்சியின் தலைமையை மீறி சுயேச்சையாக போட்டியிட்டதன் காரணமாக கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேதரத்தினம், பின்பு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் கட்சியில் முன்பு போல முக்கியத்துவம் இல்லாத நிலையில் ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். 

பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவாளராக இருந்த அவருக்கு பாஜகவில் முக்கிய இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதே வேதாரணியம் தொகுதியில் போட்டியிட்ட வேதரத்தினத்திற்காக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சுயேச்சியாக போட்டியிட்ட போதும் சரி, திமுக வின் சார்பாக போட்டியிட்டு போதும் சரி, பா ஜ க வின் சார்பாக போட்டியிடும் போதும் சரி அவருக்கு மக்களின் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்பதை அவர் வாங்கிய வாக்குகளின் படி தெரியவந்தது. 

இதன்காரணமாக அவருக்கு பாஜகவின் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில நிர்வாகத்தில் அவருடைய பெயர் இடம்பெறாமல் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில்  இருப்பதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து மீண்டும் திமுக விற்கு சென்று விடலாம் என அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. இன்று மாலையோ அல்லது நாளையோ அவர் பாஜகவில் நீடிப்பாரா அல்லது திமுகவிற்கு செல்வாரா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SK Vedharathinam will quiet from BJP


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->