ஜெயலலிதா வழியில் ஓபிஎஸ், இபிஎஸ்! செய்து முடித்த ரகசிய வேலை! கசிந்த ரகசியம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முடிப்பதற்காக சென்னைக்கு வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் தமிழகத்திலிருந்து அதிக உறுப்பினர்களை மத்திய அமைச்சரவையில் இடம்பெற வைக்கப்போகிறோம் அதற்காக அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கூட்டணி பேசுவதை  உறுதி செய்கிறார். அதனை அடுத்து அவர் அமைச்சர் தங்கமணி மற்றும் எஸ் பி வேலுமணி யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆனால் அடுத்த நாளே தமிழகப் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பேசப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதன் மூலம் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிய வந்த நிலையில் தற்போது விவாத பொருளாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற இடம் தான் உள்ளது. தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் சக்தி நிலையத்தில் தான் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில் எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி தான் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசியதாக தெரியும் ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்னதாகவே அரசு வாகனங்கள் இல்லாமல் தனியார் வாகனங்களில் துணை முதல் அமைச்சரும், முதலமைச்சரும் சக்தி நிலையத்திற்கு சென்றதாக ஒரு தகவலானது வெளியே கசிந்துள்ளது. 

கூட்டணி பேச்சுவார்த்தையை பேச பாஜக அதிமுக அலுவலகம் எதையும் ஏற்காமல் சக்தி நிலையத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இதற்கு காரணமாக அந்த இடத்தில் பேசப்பட்ட கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்தது என சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டி வருகின்றனர். இதற்கு முன்னதாக பாஜக ஆட்சி அமைத்த 1998ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக பாமக அதிமுக கூட்டணி ஆனது இந்த சக்தி நிலையத்தில் தான் பேசி முடிக்கப்ட்டதாக தகவல்கள் உலவுகின்றன. 

ஜெயலலிதாவை போலவே ஓபிஎஸ் இபிஎஸ் ஓபிஎஸ் ராசி, நாள் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்கள். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secret of sakthi nilaiyam to select admk bjp coalition meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->