சிறை தண்டனை காரணமாக தேர்தலில் போட்டியிட முடியாதா.?! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!  - Seithipunal
Seithipunal


கிரிமினல் வழக்கில் அரசியல்வாதிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்முறையீடு செய்யும் அவகாசம் முடியும் வரையிலோ அல்லது மேல்முறையீடு செய்தாலோ அதன் இறுதி தீர்ப்பு வரும் வரையில் பதவியில் தொடரலாம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) -ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வலம் வந்தனர். 

லில்லி தாமஸ் என்பவர் இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இந்த பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் போட்டார். அந்த வழக்கில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தண்டனை பெற்ற உடன் பதவிகள் ரத்தாகும் என்று 2013இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதா உட்பட பல அரசியல்வாதிகளின் பதவிகள் பறிபோனது. இவர்கள் தண்டனை முடிந்து வெளியே வந்தால், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது., வழக்கு விசாரணை ஒன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகி ஒரு ஆண்டு நிறைவடைந்த பின்னர் நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனவும், 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனவும், திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. 

இருப்பினும் இது பற்றி பாராளுமன்றத்தில் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். 

பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கின்றார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த வழக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சசிகலாவின் வருகைக்கு பின்னர் அரசியலில் பரபரப்பு, மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா போட்டியிட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala related case judgement 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->