ஒரு மாவட்டத்தில் ஒரு கட்சியே காலி! தொடரும் ஸ்டாலின் வேட்டை! கூண்டோடு திமுகவில் ஐக்கியம்!  ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா!  - Seithipunal
Seithipunal


ஒரு மாவட்டத்தில் ஒரு பெரும் படையே திமுகவில் இணைகிறது என்ற இனிப்பான செய்தி திமுக வட்டாரத்தில் பரவியுள்ளது.  எந்த கட்சியில் இருந்து தெரியுமா? கட்சியே இல்லாத கட்சியில் இருந்து தான்... குழப்பமாக இருக்கிறதா? வாருங்கள் தொடர்வோம்.. 

வருகின்ற வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், மேலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடாத ரஜினிகாந்த் முடிவை எதிர்த்து அவரது ரசிகர்கள் 20,000 பேர் கட்சி மாற உள்ளதாக தகவல் வெளியானது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசியல் வாழ்க்கையை எதிர் பார்த்து இருந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த நிலையில், அந்த அமைப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த ரஜினி ரசிகர்கள் கட்சியில் இருந்து விலகுகிறார்கள், அவர்கள் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் திமுகவில் இணைகிறார்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். 

பாரம்பரியமிக்க திமுகவில், கட்சியே இல்லாத கட்சியில் இருந்து 20000 பேர் வந்து இணைகிறார்கள் என கூறுவது அனைவரின்  மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகூட அந்த மாவட்டத்தில் 20000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்புவாரா என்பது தெரியவில்லை. 

அண்மைகாலமாக அமமுகவில், தினகரன் ஒதுக்கி தள்ளியவர்களை வேட்டையாடிய முக ஸ்டாலின் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தனது வேட்டையை ஆரம்பித்துள்ளார் போல. இதெல்லாம் எந்த அளவிற்கு திமுகவிற்கு பலம் சேர்க்கும் என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியவரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini fans will join dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->