பிரபுதேவாவுக்கு ரகசிய திருமணம்.?! பொண்ணு யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


குரூப் டான்ஸராக இருந்து நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என்று பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் நடிகர் பிரபுதேவா தமிழ், தெலுங்கு சினிமாவை விட இந்தி சினிமாவில் பிஸியாக இருக்கின்றார். தற்போது ராதே என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

வில்லு படத்தை அவர் இயக்கிய பொழுது நடிகை நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது. இது திருமணம் வரை செல்ல தனது மனைவியை அவர் விவாகரத்து செய்தார், அதன் பின்னர் இருவரும் பிரிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனது கையில் பிரபு என்று அச்சடித்து வைத்திருந்த டாட்டூவை பாசிட்டிவிடி என்று நடிகை நயன்தாரா மாற்றிக்கொண்டார். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரபுதேவாவிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனது சினிமாவும் எனக்கு குழந்தைகளும் முக்கியம் வேறு எதைப் பற்றியும் நான் சிந்திப்பது இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது அவர் தனது உறவுக்காரப் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. அந்த தகவல் பிரபுதேவா முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், ஒரு பெண்ணுடன் அவர் உறவில் இருக்கிறார். அந்தப் பெண் ஒரு டாக்டர் .விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prabhu deva may married with relation girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->