பூ பூக்கும், ஆனால் காயாக மாறாத அதிசய மரம் கொண்ட அபூர்வ கோவில்! - Seithipunal
Seithipunal


பலரும் அறியாத, தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு அரிய அதிசயங்கள் ஒவ்வொரு கோவில்களிலும் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. அதில் இன்று மூலவர் சந்தனத் திருமேனியாய் இருந்து அருள்பாலிக்கும் அபூர்வத் திருத்தலம் கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோவிலில் நிகழும் அதிசயத்தைப் பற்றி பார்க்கலாம்.

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் இருக்கிறது இந்த கருங்குளம் திருத்தலம். இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. 

இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து 18கிமீ தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியே நவதிருப்பதி கோவில்கள் உள்ளன. இந்த நவதிருப்பதி கோவில்களுக்கும், இந்த கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. 

எவ்வாறென்றால், நாம் நவதிருப்பதி கோவில்களை தரிசனம் செய்வதற்கு முன்னால் இந்த வெங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், எல்லா நவதிருப்பதி கோவில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயமானது கருங்குளம் மலையின் மேல் இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோவில் கற்பக்ரஹ சுவாமி சந்தனக் கட்டையால் ஆனவர். இத்தல இறைவன் இரண்டு சந்தனக் கட்டைகளால் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இக்கோவில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை. அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இந்த மரத்தில் புளியம்பூ பூக்குமே தவிர அது புளியங்காயாக மாறாது.

இக்கோவில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poo pookkum kayaka maratha athisaya maram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->