திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சி! கோயில் நகரத்தில் நடைபெற்ற ரகசிய சந்திப்பு!  - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இருந்த விரைவில் ஒரு கட்சியானது வெளியேறும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கட்சியானது ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சியுடன் கூட்டணி சேரும் எனவும் கூறப்படுகிறது. 

தற்போது தமிழகத்தில் திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி இருந்து வருகிறது. இந்த கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. 

இதே கூட்டணி ஆனது தற்போது வரை நீடித்து வருகிறது. திமுக அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒரு கட்சி ரஜினியுடன் கூட்டணி சேர விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்காக ரஜினியின் ஆஸ்தான அரசியல் ஆலோசகர் ஒருவரை கோயில் நகரம் சென்று அக்கட்சியின் தலைவர் சந்தித்த தகவலும் வெளியாகியுள்ளது. கோயில் வரை சென்றவர் கோயிலுக்குள் செல்லாமல் கோயிலுக்கு அருகே இருக்கும் ஆலோசகரிடம் ஆலோசனை நடத்தி விட்டு ரகசியமாக யாருக்கும் தெரியாமல் சென்று உள்ளார்  என்ற தகவல் கசிந்துள்ளது. 

வடதமிழகத்தில் அந்த கட்சியை வைத்தே அந்த சமுதாயத்தின் வாக்குகளை அள்ளி விடலாம் என கணக்குப் போட்ட திமுகவிற்கு இந்த செய்தியானது பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இருப்பினும் அவருக்கு இன்னும் 2 சீட்டுகள் கொடுத்து சரிக்கட்டி விடலாம் என திமுக சீனியர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி கட்சி ஆரம்பிக்கிராரோ இல்லையோ அவரால் திமுக கூட்டணியில் உள்ள முட்டல் ஆனது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் 2 எம்பிகளுடன் இருக்கும் அக்கட்சிக்கு என்னதான் பிரச்னை என விசாரித்தால், கூட்டணியில் இருந்தாலும் மரியாதை இல்லை என்றும், பிரசாந்த் கிஷோர் வியூகப்படி திமுக தனியாக போட்டியிட முடிவெடுத்தால், கடைசி நேர சிக்கல் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே மாற்று திட்டத்தினை அக்கட்சி வைத்துள்ளதாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one party planned left from dmk coalition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->