உளறலின் உச்சத்தைத் தொட்ட  ஸ்டாலின்! திமுகவினர் தலையில் அடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்த பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தினை செய்துகொண்டிருந்த மு க ஸ்டாலின், மக்களிடையே நன்மதிப்பைப் பெற  புள்ளி விவரத்துடன் கூடிய ஒரு கணக்கினை தெரிவித்தார். அதனைக் கேட்ட மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள்  என அனைவருமே அதிர்ச்சி அடைந்து போனார்கள். 

ஒரு அரசியல்வாதி பேசுவதை, மக்கள் சந்தேகப்படாத படி தெளிவாக பேச வேண்டும் அல்லது பேசுவதை சரியாக குழப்பமில்லாமல் பேசிவிட வேண்டும். ஆனால் இதில் எதிலுமே திமுக தலைவர் மு க ஸ்டாலின் சரிப்பட்டு வரவில்லை. அவருக்கு எழுதிக் கொடுத்தாலும் பார்த்துப் படிக்க வரவில்லை, மனப்பாடம் செய்து கொண்டு சென்றாலும் உளறி விடுகிறார் என திமுகவினர் குமுறுகின்றனர். 

இந்த பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே பல இடங்களில் பல கூட்டங்களில் அவர் உளறாத கூட்டங்களே இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இருந்தாலும் 70 வருட பாரம்பரியமிக்க கட்சியின் தலைவர், 23 வருடங்கள் ஆட்சியில் இருந்த  கட்சி என்பதால் நிரந்தர தொண்டர்கள் இருப்பதால் அந்த தொண்டர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர் என்னதான் உளறினாலும் அதையும் ஏற்றுக் கொள்ளும் தொண்டர்கள் தான் அக்கட்சியில் இருக்கிறார்கள். 

ஆனால் இன்று அவர் உளறியது அரசியல் தெரிந்த அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவரது கட்சியின் சார்பில் தற்போது சட்ட சபையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 88 கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி மொத்தம் 98 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக கூட்டணி136 இடங்களை கைப்பற்றியது. 98 இடங்களில் 89 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் காங்கிரசும் ஒரு இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் கைப்பற்றினார்கள்.  இதில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மறைந்து விட, திமுகவின் பலமாக சட்டசபையில் 88 உள்ளது. 

நாமக்கல் கூட்டத்திலேயே புள்ளிவிவரத்துடன் பேசிய ஸ்டாலின், தன்னை  அறிவார்ந்த மனிதன் என்று நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ புள்ளிவிவரங்களை அடுக்க ஆரம்பித்தார். ஆரம்பமே சறுக்கல்தான் 234 சட்ட மன்றங்கள் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்திலேயே ஒரு சட்டமன்றம் தான். 234 சட்டமன்ற தொகுதிகள் தான் இருக்கிறது என்பதை அவருக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். 

இதனை அடுத்துப் பார்த்தால் தமிழகத்திலே ஆட்சி அமைக்க மொத்தம் 118 தொகுதிகள் வேண்டும் என்றார் இது சரியான ஒரு கணக்குதான். அதன்பிறகு அவர் ஒரு கணக்கு சொன்னார். அந்த கணக்கு கேட்ட திமுக உறுப்பினர்களுக்கு தான் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. ஏனெனில் அவர் தற்போது சட்ட சபையில் இருக்கும் திமுக கூட்டணியின் பலத்தின் கணக்கினை கூறினார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் 87 இடங்களையும்,  கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் ஆக மொத்தம் 107 இடங்களையும் பெற்றிருப்பதாக தெரிவித்தார். 

இதனைக் கேட்ட உடன்பிறப்புகளுக்கு தான் மண்டையை எங்கயாவது முட்டி மோதிக் கொள்ளலாமோ என்று இருந்தது. ஏனெனில் தற்போது தமிழக சட்டசபையில் திமுக கூட்டணிக்கு இருக்கும் பலம் என்பது 97 என்பதாகும். இதனை விட கொடுமை என்னவென்றால் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும், இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சியின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தெரியாமல் இருப்பதுதான் உளறலின் உச்ச பட்சமாக போனது. ஏனெனில் தற்போது தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் 88. ஆனால் அவர் கூறியது 87 இவ்வாறு இருக்க தன்னுடைய கட்சியின் எம்எல்ஏக்களின்  எண்ணிக்கையை கூடத் தெரியவில்லையே என உடன்பிறப்புகள் மண்டையை பிய்த்து கொள்ளாதது ஒன்றுதான் குறை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவரையும் ஆதரிக்க வேண்டிய ஒரு இடத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள். 

இந்த பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் முக ஸ்டாலின், தனக்கு என்ன வருமோ அதை அவர் சரியாக செய்து இருந்தால் கூட அவர் மக்களை கவர்ந்து இருப்பார். மேலும் அவர் திட்டங்களை கூறியிருந்தால் கூட,  மக்களை கவர்ந்து இருக்கலாம்.  ஆனால் ஒவ்வொரு கூட்டங்களிலும் தனக்கு வராத புள்ளிவிவரங்களையும், பேசத்தெரியாத திட்டங்களையும் தவறாக பேசி, சூழ்நிலைக்கு ஏற்ற மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட நினைத்து அதிலும் சொதப்பி வருகிறார்.  

"முறையான தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் தோல்வியடைந்து உள்ளார். பிரச்சாரங்கள் போது வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகிறார். பல இடங்களில் சொதப்பி ஒரு கட்சிக்கு மிகப்பெரிய தலைமையாக இருப்பதற்கான தகுதி இல்லாதவர் என்ற அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்துகொண்டிருக்கிறது. கடந்த 8 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுகவின் மீது மக்களுக்கு சிறிதளவும் ஈர்ப்பு ஏற்படவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம் முக ஸ்டாலின் தலைமை தான் எனவும் அவர் தற்போது தான் தலைவரானாரே என்றாலும் இதற்கு முன் அவரே செயல் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது" என்கின்றனர் நொந்துபோன உடன்பிறப்புகள். 

கடந்த 2014 பிறகு ஏறக்குறைய ஆக்டிவ் அரசியலில் இருந்து கலைஞர் கருணாநிதி ஒதுக்கப்பட பிறகு முழுவதுமாக திமுகவினை  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் மு க ஸ்டாலின். திமுகவை என்று தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாரோ அன்று முதல் இன்று வரை இறங்கு முகத்தில் தான் இருந்துகொண்டிருக்கிறது. இது போதாத குறைக்கு அண்மைக்காலமாக அவர் இந்து மத சடங்குகளை குறித்து  தவறான விமர்சனம் செய்தது எல்லாம் இந்த தேர்தலில் கடுமையாக அவருக்கு பின்னடைவு கொடுக்கும் என்றே தெரியவருகிறது. முடிந்தவரை முட்டுக்கொடுத்து பார்த்து திமுகவினர் இதற்கு மேல் எதுவுமே செய்ய இயலாது, தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை கூட தெரியாதவரை எல்லாம் தலைவர் என்று வெளியே சொல்ல வெட்கமாக இருக்கிறது என்று கூறி புலம்பிக் கொண்டே செல்கின்றனர். 

அறிஞர் அண்ணாவின் பேச்சில் வளர்ந்த கட்சி, ஸ்டாலின் பேச்சினால் சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். 

English Summary

mk stalin misleading speech upset dmk members


கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
Seithipunal