திமுக வாரிசுக்கு குவிந்த விருப்ப மனு.. அன்ன போஸ்ட்டாக தேர்வு.! - Seithipunal
Seithipunal


கொளத்தூர் தொகுதி மு.க ஸ்டாலினுக்கு தான் செல்லும் என்பதால், அந்த தொகுதியின் திமுக விருப்ப மனு படிவத்தை வேறு யாரும் வாங்கவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், கணிசமான தொகுதியில் தங்களின் சின்னத்துடன் போட்டியிட நினைத்துள்ள மதிமுக, அதிக தொதொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.எம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இது ஒருபுறம் இருந்தாலும், திமுக சார்பில் தங்களின் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் விருப்ப மனு விநியோகம், வேட்பாளர்கள் தேர்வு செய்தல் என அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. திமுக சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் விநியோகமும் செய்யப்பட்டது. 

விருப்ப மனுக்களை அக்கட்சியினர் வாங்கிச்சென்று தங்களின் விருப்ப மனுக்களை தலைமையிடம் ஒப்படைத்த நிலையில், நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.க ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிலையில், அந்த தொகுதியில் திமுக சார்பில் வேறு யாரும் விருப்ப மனுக்களை பெறவில்லை. 

இதனால், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரடியாக கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணன் போஸ்டில் திமுக வேட்பாளராக மு.க. ஸ்டாலின் தேர்வாகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், " எப்படியென்றாலும் கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் தான் வேட்பாளராக நியமனம் செய்யப்படுவார். 

மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை விட்டு பிற தொகுதியில் களம்காணப்போவதில்லை. இதனால் எதற்கு வெட்டி செலவு என உடன்பிறப்புகள் அந்த தொகுதிக்கு விருப்ப மனு வாங்கியிருக்க மாட்டார்கள். இதனையெல்லாம் பெருமையென்று நினைத்தால், அது உங்களுக்கு பெரும் இழப்பை தரலாம். மேலும், அந்த ஒரு தொகுதிக்கு மு.க. ஸ்டாலின் பெயரில் வந்து குவிந்த விருப்ப மனுக்கள் ஏராளம் என்றும் கூறப்படுகிறது " என்று தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Kolathur Consultancy Election Option Petition Dissolution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->