தமிழக முதல்வர்., முக அழகிரி.! முக ஸ்டாலினால் சோகத்தில் மூழ்கிய திமுக உடன்பிறப்புகள்!  - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் 'எல்லோரும் நம்முடன்' என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக திமுகவின் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த இணையதளம் மூலியமாக திமுகவில் உறுப்பினராக சேர கட்டணம் எதுவும் கிடையாது, மிக எளிதாக திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் 45 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அப்போது தெரிவித்திருந்தார்.

முதல் நாளில் இணையதளம் மூலமாக திமுக உறுப்பினர் அட்டை பெற்றவர்கள் 30 ஆயிரத்துக்கும் மேல் என்று திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எல்லோரும் நம்முடன் என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தின் மூலம், அமெரிக்க அதிபர் டிரம்ப் திமுக உறுப்பினர் ஆக இணைத்து, அவருக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டையையும் பெற்று அதனை இணையதளத்தில் பதிவிட்டது திமுகவின் உறுப்பினர் சேர்க்கையை கேலிக்கூத்தாக்கியது.

இதனைப் பார்த்த இன்னும் குசும்புக்கார நெட்டிசன்கள் ஒரு படி மேலே சென்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, திமுகவின் உறுப்பினராக இணைத்து அவருக்கான உறுப்பினர் அட்டையையும் பெற்று, அதையும் இணையத்தில் வைரலாக்கினர். மேலும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி அவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை பெற்று இணையத்தில் பதி விட்டனர். இது திமுகவின் உடன் பிறப்புகளுக்கு இணையத்தில் தலைகாட்ட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது.

திமுகவின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதிலிருந்து திமுகவின் நடவடிக்கைகள் பலவும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. பிரசாந்த் கிஷோர் திமுகவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கு, திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் தற்போது வரை அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனையே சுட்டி காட்டி, ஆளும் அதிமுகவின் அமைச்சர்கள் வச்சு செய்தனர்.

இந்த நிலையில் 'எல்லோரும் நம்முடன்' என்ற இணையதள திமுக உறுப்பினர் சேர்க்கையும், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையைப் பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கியிருக்கலாம் என்று திமுக உடன்பிறப்புகள் தலையில் கைவைத்து புலம்பி வருகின்றனர். 

இந்த எல்லோரும் நம்முடன் என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தில், கிட்டதட்ட யார் வேண்டுமானாலும், யாருடைய புகைப்படத்தை கொடுத்தும் உறுப்பினர் சேர்க்கையை பதிவு செய்து கொள்ளலாம் என்ற நிலையில்தான் உள்ளது. இப்படியே சென்றால் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் வரும் தேர்தலில் என்ன செய்யப் போகிறாரோ என்று திமுக உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.

ஏற்கனவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் பழமொழிகள் மற்றும் பெயர்களை கூறும்போது உளறி வந்த நிலையில், தற்போது அவர் தொடங்கி வைத்த இந்த எல்லோரும் நம்முடன் என்ற திட்டமும் குளறுபடி ஆகியுள்ளது. இது திமுகவின் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. இப்படியே சென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக., சீமான் சொல்வது போல் 'வாய்ப்பில்ல ராஜா.., வாய்ப்பில்லை..,' என்று நெட்டிசன்கள் தங்களின் பதிவுகளில் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin ellarum nammudan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->