திமுகவுக்கு எதிராக திரும்பிய மு க அழகிரி.. எடுத்த புதிய அவதாரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், முக அழகிரி பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. முக அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாகவும், ரஜினி கட்சியில் இணைய உள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் உள்ளது. இவற்றை அனைத்தையும் முக அழகிரி மறுத்து வந்தார். நான் அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டேன் என கூறினார். 

இதனிடையே, முக அழகிரி புதிய கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியின் பெயர் கருணாநிதி திமுக என்றும், கட்சியின் பெயரை பதிவு செய்வதற்கான பணியையும் அவர் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய கட்சியின் அறிவிப்பை தனது பிறந்த நாள் ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட உள்ளார். உடனடியாக மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், முக அழகிரி புதிய கட்சியை ரஜினி கட்சியோடு இணைந்து பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கட்சியின் கொடி, கொள்கை பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk alagiri may be started to new party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->