உலகம் அழியும் நாளை நெருங்கிவிட்டோமா.?! பீதியை கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்.!  - Seithipunal
Seithipunal


ஜீன் 21ஆம் தேதியுடன் உலகம் அழியும் என்று மாயன் காலண்டரிலுள்ள செய்தி பரவலாக பேசப்படுகிறது. மாயன் காலண்டர்படி வரும் 21ம் தேதிதான் உலகின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இதே போன்றதொரு சர்ச்சை கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுந்தது. பின்னர், அது பொய்யானதும் பரபரப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனம், முதல் மனித நாகரிக இனம் என்று கருதப்படுகிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தை சேர்ந்தவர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரத்தில் மிகச்சிறந்து விளங்கினர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது.

மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1582 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிரிகோரியன் காலண்டர் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் முன்பு உலகில் பல்வேறு வகையான காலண்டர்களை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் முக்கியமானது மாயன் காலண்டர் மற்றும் ஜூலியன் காலண்டர்.

மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 2012 ஆம் ஆண்டு, டிசம்பர் 21ஆம் தேதி உலகின் கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டரின்படி வரும் 21 ஆம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012 டிசம்பர் 21 ஆம் தேதி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், “மாயன் காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21 ஆம் தேதியா.?” என்று சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல, ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் உலகம் அழியும் என கூறப்பட்டு வந்த நிலையில், அது பொய் என நிரூபணமானது. அதுபோலவே, மீண்டும் ஒரு தகவல் வலம் வரத் துவங்கியுள்ளது. 

நாசா விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்து, "முதன் முதலில் உலகம் அழியப்போகிறது என்று சுமேரியர்களால் கூறப்பட்டது. அதற்கு பிறகு 2003-ஆம் ஆண்டும், 2012-ஆம்ஆண்டும் உலகம் அழியும் என மாயன் கலண்டரைச் சுட்டிக்காட்டினர். அதுபோல ஒன்றுமே நடக்கவில்லை. தற்போது 2020-ஆம் ஆண்டைக் குறிப்பிடுகின்றனர்.” என அந்த கோட்பாட்டை மறுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayan calendar report about end of the world


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->