ஸ்டாலினுடன் கமல் ரகசிய கூட்டணி.?! வெட்ட வெளிச்சமாகி வீதிக்கு வந்த உண்மைகள்.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்தது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

கமலஹாசன் கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே அவருடைய குறிக்கோள் அதிமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. 

திமுகவுடன் அவர் மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவுக்கு எதிராக இருக்கும் ஓட்டுகளைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கட்சி ஆரம்பித்து உள்ளார் என்றும், இதற்கு மிகப்பெரிய பலன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கமலஹாசனின் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதும் அந்த ரகசிய கூட்டணியின் அடிப்படைதான் என்று தற்போது பேசப்படுகிறது. 

பாஜக மற்றும் அதிமுகவை மட்டும் தான் அவர் தொடர்ந்து இவர் விமர்சித்து வருகின்றார். ஒருமுறைகூட திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை அவர் வைக்கவில்லை. இதனால், மேலும் சந்தேகம் வலுக்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கமல் திமுகவையும் விமர்சிப்பார். இதுபோன்ற குற்றச் சாட்டு தேவையில்லாதது என்று அவரது கட்சியினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal and stalin has secret plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->