இரண்டாக பிளக்கும் அதிமுக?! சசிகலா வெளிவரும் நேரத்தில்.. அதிமுகவில் உருவாகும் பூகம்பம்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அவசர உயர்மட்ட குழு கூட்டம் இன்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவர்தான் முதல்வராக வரவேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வரவேண்டும் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதனால் அக்கட்சியில் மீண்டும் சர்ச்சை வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு முறை உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தி விவாதித்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை ஆகும் இந்த நேரத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீபகாலமாக அடுத்த முதல்வர் யார் என்ற ஒற்றை கேள்வியினால், அதிமுகவில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என முடிவு செய்ய தொடர்ந்து இரு முறை உயர்மட்ட குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், அதில் உறுதியான முடிவும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக இக்கூட்டம் கூட இருக்கின்றது. இதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒருபுறம் சிறை தண்டனை முடிந்து சசிகலா வெளியே வரும் நிலையில், அதிமுகவில் இப்படி ஒரு பொது பிரச்சினை வெடித்துள்ளது. ஆகவே தற்போது உள்ள நிலையில் சசிகலா வெளியே வந்தால், கட்சி யார் பக்கம் போகும் முதல்வர் பதவியில் அமர்வார்? என்ற பல்வேறு கேள்விகளுடன் அதிமுக தன்னுடைய ஆட்சிக் காலத்தை மெல்ல நகர்த்திக்கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps ops cm ceat issue may reflect election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->