திடீரென அந்தர் பல்டி அடித்த திமுக! அதிர்ச்சியில் அதிமுக! தமிழகத்தில் நடக்கும் மாற்றங்கள்! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு மாதங்களாக இந்திய முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்? யார் ஆட்சி அமைப்பார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் வருகின்ற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது பதில் கிடைக்கும்.

நேற்று முன் தினம் மே 19 ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் இந்தியா முழுவதும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கருத்துக்கணிப்பை தான் வெளியிட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் வெளியான கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரி இருக்க தமிழகத்தில் தமிழக ஊடகங்களால் நடத்தப்பட்ட வெளியான கருத்துக் கணிப்புகள் வேறு மாதிரியான முடிவுகளை கூறுகிறது. 

மக்களின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது 23 ஆம் தேதி தான் தெரியவரும் நிலையில் அதற்கு முன்னதாகவே எங்கள் அணி தான் வெற்றி பெறும் என்ற ஒரு மாயையை பிம்பத்தினை மக்களிடையே உருவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்து அவர்களுக்கு ஆதரவான கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

தமிழகத்திலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் ஒரு அணியும், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அதாவது ஏறக்குறைய 90  சதவீதம் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் அணியே வெல்லும் என தமிழக நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். இதன் பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன. 

அதாவது நாளை மறுநாள் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அங்கே செல்லும் அதிகாரிகளுக்கு திமுக தான் வெற்றி பெறும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கும் விதமாக இந்த கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது போன்ற சாதுர்யமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் கலைஞர் கால திமுகவிற்கு வாடிக்கையான ஒன்று தான் என்ற கருத்தினையும் பலர் வைக்கிறார்கள். 

கடந்த மூன்று நான்கு தேர்தலாகவே தமிழகத்தில் நடத்தப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெற்று வருகிறது. ஆனால் தேர்தல் முடிவில் மட்டும் வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவி வருகிறது. 

இந்நிலையில் இந்த தேர்தல் கருத்துக் கணிப்பிலும் திராவிட முன்னேற்ற கழக அணியே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வாறான ஒரு எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதால், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளும், ஒவ்வொரு கட்சியின் சார்பில் செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர்களும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக தலைமை கழகமே இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பினை இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அதற்கு ஏற்றார் போல நேற்றுவரை  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த திராவிட முன்னேற்றக் கழகம், இன்று தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும் திடீர் பல்டி அடித்துள்ளது. இது இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. அதனால் இங்கே எதிர் முகாமில் உள்ளவர்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும் என எச்சரித்து வருகிறார்கள். 

யார் வெற்றி பெறுகிறார்களோ? தோல்வி அடைகிறார்களோ? ஆனால் மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அந்த முடிவானது வெளியாக வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு குடிமகனின் எண்ணமாக உள்ளது. இதை காப்பாற்றும் விதமாக தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளின் முகவர்களும் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk with exit poll results


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal