லண்டனுக்கு பரந்த ரத்த மாதிரிகள்.! ஸ்டாலின் உடல்நிலை., உடன்பிறப்புக்கள் அச்சம்.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு வருடமும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்தில் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது. இருப்பினும், வெளிநாடுகளில் கோனோனா தாக்கம் இருந்ததால் அந்தப் பயணம் நிறுத்தப்பட்டது. 

அதன் பின்னர், ஜூன் மாதத்தில் அவர் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானங்கள் தடை பட்டிருப்பதால் செய்வதறியாது தவித்ததாகவும் தனி விமானம் மூலமாக லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியது. 

இருப்பினும் இந்த தகவல் உண்மை இல்லை, திமுக யாரையும் தனி விமானம் கேட்டு அணுகவில்லை என்று திமுகவினர் தெரிவித்தனர். லண்டன் செல்லாத காரணத்தால் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சிகள் உள்ளிட்டவற்றை செய்து உடல் ஆரோக்கியத்தை பேணிவந்தார். 

வெளியூர் பயணங்களை தவிர்த்து விட்டு காணொலிக் காட்சி மூலமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கொரோனா வைரஸின் தாக்கம் குறையாத சூழலில் தற்போது ஸ்டாலினின் ரத்த மாதிரிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் பரிசோதனை முடிவுகளை கொண்டு மருத்துவர்கள் அவருக்கு அங்கிருந்தபடி சிகிச்சை அளிப்பார்கள் என்றும், தற்போது அவர் எந்த பிரச்சினையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் ஓராண்டாய் அவர் சிகிச்சை பெறாமல் இருப்பதால் உடன்பிறப்புகள் தேர்தல் நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும் என அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk volunteers sad about stalin condition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->