ஆட்சியை பிடிக்க தயாரான திமுக! வெளியான பரபரப்பு கணிப்பும் கணக்கும்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்ட மன்றத்தில் அதிமுகவின் தற்போதைய பலம் 114 உறுப்பினர்கள். 22 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. இடைத் தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக அதிமுகவிற்கு எதிராகப் போனால், அதாவது 22 இடங்களிலும் அதிமுக தோல்வியடைந்தால், அதிமுக -114 மற்றும் எதிர்கட்சிகள், டிடிவி தினகரன் உட்பட - 120 இடங்கள் பெரும், அதிமுக பெரும்பான்மையை இழக்கும். 

தற்போதைய சூழலில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள அதிமுகவிற்கு 22 இல்  4 இடங்களே போதுமானது. திமுக 22 இடங்களை முழுமையாக வென்றாலும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளோடு தான் பெரும்பான்மையைப் பெற முடியும். அதிமுக பெரும்பாண்மை உறுப்பினர்களை கொண்ட கட்சியாகவே ஆட்சியில் தொடரும். இருப்பினும், திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 119 க்கு 114 என்ற கணக்கில் வெற்றி பெறும். அதிமுக ஆட்சியை இழக்கும். தினகரன் நிச்சயமாக திமுகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்துவிட்டார். அவரும் பொது தேர்தலை தான் விரும்புவார். 

ஆனால் சட்ட சபையைக் கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும். இது மத்தியில் உருவாகும் ஆட்சியைப் பொறுத்து எளிதாகவோ அல்லது நீண்ட போராட்டத்திற்கு பின்போ நடக்கலாம். ஆனால் இந்த வாய்ப்புகள் எல்லாமே திமுக 22 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே. 

ஒருவேளை இடைத் தேர்தலில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றால் கூட, சட்ட சபையில் அதிமுக 118 இடங்களோடு பெரும்பான்மையாகவே தொடரும் வாய்ப்பு உள்ளது. அப்போது திமுக கூட்டணியின் பலம் 115 ஆக இருக்க கூடும்.  இந்த சூழலில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசு தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பிலோ, நம்பிக்கை இல்லா தீர்மானம் போன்ற சூழலிலோ வாக்களிக்கவிட்டால் அதிமுக அரசு 115க்கு 115 என்ற கணக்கில் சமனில் நிற்கும். 

ஆனால் அதிமுக 7 திமுக 15  தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி எவ்வித சிக்கலும் இல்லாமலே நீடிக்கும். அதாவது தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசினை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட அதிமுகவிற்கு அப்போது பிரச்சனையில்லை. அப்போது திமுக கூட்டணி 112, தினகரன் 1 மற்றும் தினகரன் ஆதரவு 3 என எதிர்தரப்பில் 116 பேர் மட்டுமே இருப்பார்கள். தினகரன் திமுகவுடன் இணைந்து செயல்பட்டாலும் கூட அதிமுக ஆட்சி கவிழவே வாய்ப்பு இல்லை. 

ஒருவேளை அதிமுக தேவையான அளவில் வெற்றி பெறாமல் தினகரன் தரப்பில் வெற்றி பெற்றால், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க திமுகவிற்கு தினகரனின் ஆதரவு தேவைப்படும். அந்த சூழல் தினகரனுக்கு அதிமுகவுடனான பேரத்தை உயர்த்த மட்டுமே பயன்படும், மாறாக திமுகவிற்கு எவ்வித பயனையும் கொடுக்க போவதில்லை.

22 இடங்களையும் திமுகவே வென்று விட்டாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்குமா என்பதும் கேள்விக்குறி தான். அதனால் ஸ்டாலினின் முதல்வர் கனவு நீட்டிக்கப்படலாம், ஒருவேளை கலைஞர் சாதூர்யம் ஸ்டாலினிடம் காணபட்டால் கனவு நினைவாகலாம்.

தற்போதைய அதிமுக 8 இடங்களை வென்று விட்டாலும், மத்திய அரசில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் அசராமல் எடப்பாடி பழனிசாமி அரசு தொடரும். 8 இடங்களுக்கு குறைவாக வென்றால் மத்தியில் அமையும் அரசின் ஆதரவும், ஆளுநரின் ஒத்துழைப்பும் தேவை. மத்தியில் பாஜக அரசமைக்க இயலாமல் வேறு ஒரு ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழ்க்கப்படும் சூழல் உருவாகும்.

22 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றுவிட்டால். இரட்டை இலையில் போட்டியிட்டு ஆதரவு அளிக்கும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆதரவு கூட தேவையில்லை. 118 உறுப்பினர்களுடன் அதிமுக அசைக்க முடியாத படி இன்னும் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துவிடும்.  

இதனையெல்லாம் தாண்டி 11 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒன்று உள்ளது நினைவு கூற வேண்டியது அவசியமாகும். தகுதிநீக்கம் நடந்துவிட கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார் என்பதனை அவருடைய வாரணாசி சுற்றுப்பயணம் காட்டுகிறது. ஒருவேளை அவ்வாறு நடந்துவிட்டால் அதிமுகவின் பலம் 103 ஆக குறையும், 3 உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால்100 ஆக குறையும். அப்போது சட்டமன்றத்தின் பலம் 223 ஆக இருக்கும் அப்போது பெரும்பான்மைக்கு 112 தேவை. அதனால் 12 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும். 

ஆக, 22 இல் அதிமுக 12 இல் வெற்றி பெற்றுவிட்டால் திமுக என்ன முயற்சி செய்தாலும் அதிமுக ஆட்சியே நிலைக்கும். தற்போதைய சூழல் வரை அதிமுகவில் அதிருப்தியில் யாரும் வெளியேறவில்லை எனறால் அனைத்து சாதகமான சூழலும் அதிமுகவிற்கே உள்ளது. திமுக கூட்டணி ஆட்சி அமைக்க 22 யிலும் வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் என்ற ஒரே வாய்ப்பு தான் உள்ளது. ஆனால் அது சாத்தியமா என்றால் மக்கள் நாளை மே 23 ஆம் தேதி என்ன கூறுகிறார்கள் என்பதை பொறுத்து தான் கூற முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk try to form the government in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->