பிரபல செய்தி தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் திமுகவிற்கு கொடுத்த முரட்டு முட்டு! ஒரே பதிவில் தலைதெறிக்க ஓட்டம்!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் "திராவிட இயக்கத்தின் வரலாற்றில் எனது பயணம்" என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. வீரபாண்டியார் மறைந்து 7 வருடங்கள் ஆன நிலையில், அதனை விமர்சித்து சிங்கத்தின் வரலாறு சிதைக்கப்பட்ட வரலாறாக வந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூலில் பதிவு ஒன்றினை எழுதினார். 

அதில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்தும் இருந்த தகவல்களை பொறுத்துக்கொள்ள முடியாத, பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் மூத்த உதவி ஆசிரியராக "வரலாறு" பேசுபவர் ஆவேசமாக எழுதிதள்ளினார். 

அதனை பகிர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாமக தரப்பில் எழுதப்பட்ட பதிவை பார்த்த அந்த பத்திரிக்கையாளர், பதில் சொல்ல வழியில்லாமல் அவர் திமுகவிற்கு கொடுத்த முட்டை அகற்றிவிட்டு (பதிவை நீக்கிவிட்டு) ஜகா வாங்கிவிட்டார். 

பாமக தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் பதிவானது, "நேற்று முன்தினம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் "திராவிட இயக்கத்தின் வரலாற்றில் எனது பயணம்" என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உளறிக்கொட்டியது உங்கள் கண்களுக்கு படவில்லையா? அதெப்படி ஸ்டாலின் உளறுவது உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் தெரியவும், கேட்கவும் மாட்டேன் என்கிறது...... இது ஒரு நடுநிலை பத்திரிக்கையாளருக்கு அழகா?

ஸ்டாலின் உளறிக்கொட்டியது கீழ் வருமாறு.........

சேலத்து சிங்கம் வீரபாண்டியார் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் பெயர் "திராவிட இயக்க வரலாற்றில் எனது பயணம்" ஸ்டாலின் அவர்களால் இதைகூட ஒழுங்காக சொல்ல முடியவில்லை..... "திராவிட இயக்கத்தில் எனது பயணம்" என்று வரலாற்றை விட்டுவிட்டு உளறுகிறார். வரலாறு தெரியாமல் துண்டு சீட்டு பார்த்து பேசுபவருக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது.

வீரபாண்டியார் திமுக வில் இணைந்தது 1956 என்கிறார், அவர் திமுகவில் சேர்ந்ததோ 1957. வீரபாண்டியார் 2012ல் நவம்பர் மாதம் 23ஆம் தேதி உயிர்நீத்தார். ஆனால் 2013 வரை வீரபாண்டியார் உயிர் வாழ்ந்ததாக ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்கிறார். இந்த உளறல்களுக்கு பத்திரிக்கையாளரிடம் ஏதேனும் கருத்து உண்டா? 

வீரபாண்டியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவராக இருந்திருக்கமாட்டார். மருத்துவர் அய்யாவின் பதிவை முழுவதுமாக படிக்காமல் இந்த பதிவை பதிவிட்டுவிட்டீர்கள் என்று நன்றாக தெரிகிறது. வீரபாண்டியார் எங்கு, எப்போது, என்ன என்ன அத்தியாயங்கள் தனது சுயசரிதையில் எழுதுகின்றார். அதிலும் கருணாநிதியிடம் தமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், மனக்கசப்புகள், 2012 பொதுக்குழு அடாவடிகள் என்பதை குறித்து தனி அத்தியாயம் எழுதியிருப்பதை மருத்துவர் அய்யாவிடம் வீரபாண்டியார் தெரிவித்திருக்கிறார் என்று மருத்துவர் அய்யா வின் இன்றைய பதிவில் தெளிவாக உள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் அய்யா ஒருமுறை வீரபாண்டியாரின் சுயசரிதை பற்றி விளக்கமாக பேசியும் உள்ளார். இதையெல்லாம் சரியாக கவனிக்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி எதாவது எழுதிவிட்டால் உடனே வந்து அரைகுறையாக கருத்துகூறுவது, நடுநிலைப்போல் காட்டிக் கொள்ளும் உங்களைப்போல் பத்திரிக்கையாளர்களுக்கு அழகல்ல. சரியாக படிக்கவும். பிறகு முட்டு கொடுக்கவும். நன்றி" என அந்த பதிவு முடிகிறது. 

இந்த பதிவை பார்த்த வேகத்தில் பதில் அளிக்க முடியாத உலக வரலாற்றினை சொல்லும் பத்திரிக்கையாளர் பதிவையே நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk support senior journalist deleted his post and escape from social media people


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->