ஸ்டாலினின் கையில் வழங்கப்பட்ட முக்கிய அதிகாரம்.! முக்கிய இடத்தில் இருந்து முதல் நபராக பறந்து வந்த கடிதம்.!!  - Seithipunal
Seithipunal


அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்., வரும் ஞாயிற்றுக்கிழமையன்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில்., தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தி வரும் நிலையில்., தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்துள்ளனர்.   

இந்த தேர்தல் முடிவானது மூன்று கட்டமாக இருக்கும் என்றும்., அந்த மூன்று கட்டங்களின் படி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது., காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது மற்றும் மாநில கட்சியின் உதவியுடன் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது என்பதாகும். 

இந்த சமயத்தில் மாநில கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாது மூன்றாவது அணியாக சேர்ந்து ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்., இதற்காகவே தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் அனைத்து கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசியதாக தெரியவருகிறது. இந்த திட்டத்திற்கு மாநில தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இதுமட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியை சாராமல் அமையும் கூட்டணி நல்ல கூட்டணியாக இருக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சி., பகுஜன் சமாஜ்வாதி கட்சி., திரிணாமுல் காங்கிரஸ் கட்சி., தெலுங்கு தேச கட்சிகள் ஆகியவை ஒன்றினைந்து தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் அல்லாத பெரிய கூட்டணியானது தேசிய அளவில் உருவாகலாம் என்றும்., அதற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில்., இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் ஒப்புக்கொள்ளாத நிலையில்., ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளும் சமயத்தில் காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியில் எப்போதும் திமுக இருக்காது என்று தெரிவித்து வருகிறார். இந்த சமயத்தில் ஸ்டாலினின் திட்டப்படி காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் எதிர்க்கட்சியை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. 

திமுக தலைவர் ஸ்டாலினின் ஆசைப்படி காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்லாமல் மாநில கட்சிகளானது ஆட்சியை அமைக்க இயலாது. இதன் காரணமாக மாநில கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அதிகபட்சமாக சுமார் 220 இடங்களில் வெற்றி பெரும் என்று வைத்து கொண்டாலும்., பிற இடங்களில் பாரதிய ஜனதா கட்சி அல்லது காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கும் பட்சத்திலேயே வெற்றி பெற முடியும். 

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை என்பதால்., ஸ்டாலினின் இந்த யோசனையை எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்துள்ளது. அடுத்தபடியாக நல்ல தீர்வை எட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயாராகி., குலாம் நபி ஆசாத் பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த முடிவானது எதிர்க்கட்சிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலுக்கு அடுத்தபடியாக உருவாகும் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளித்தால்., முக்கிய அமைச்சரவை பதவிகள் காங்கிரஸ் எடுத்துக்கொண்டு., பிரதமர் பதவியை மாநில கட்சிகளுக்கு வழங்கி., மாநிலத்தின் தலைவர் பிரதமராக மாற்றப்படுவார். இந்த நிலையின் காரணமாக தேசிய அளவில் திமுக முக்கிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது. இதனாலேயே காங்கிரசின் மூத்த தலைவரான சோனியா காந்தி பேச்சுவார்த்தை கடிதத்தை ஸ்டாலினுக்கு முதலில் அனுப்பியுள்ளார். ஸ்டாலின் - சந்திர சேகரராவ் சந்திப்பிற்கு இதுவும் காரணம் என்று தகவல் கிடைக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk stalin plan to complete indian prime minister


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->