ஸ்டாலின் முதலமைச்சராவது அப்பறம், முதலில் இந்த வேலையை செய்யுங்க! கண்டிப்பான உத்தரவால் அதிர்ந்து போன அறிவாலயம்! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இதுவரை முன்னணி பேச்சாளர்களாக, பிரச்சார பீரங்கிகளாக இருந்து வந்த 400 பேரை ஒதுக்கி வைத்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை மட்டுமே பிரச்சாரம் செய்ய வைத்து முன்னிலைப்படுத்தியது திமுக. ஆளும் கட்சிகளுக்கு எதிரான அலையினை சரியாக பயன்படுத்திக் கொண்ட திமுக, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. தற்போது அந்த வெற்றியை காரணம் காட்டி உதயநிதி ஸ்டாலினை கட்சியின் முக்கிய நிர்வாகியாக மாற்ற வேண்டும் என துர்கா ஸ்டாலின், ஸ்டாலினுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறார். 

உதயநிதியை நேரடியாக முக்கிய பதவிக்கு கொண்டுவர, கட்சியின் சீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிர்வாகிகள் யாருமே நேரடியாக எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல், அவர்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகளை வைத்து மறைமுகமான நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் எவ்வித நெருக்கடி வந்தாலும் உதயநிதியை உள்ளே கொண்டு வந்தே தீர வேண்டும் என துர்கா தீவிரம் காட்டி வருகிறார். 

துர்கா ஸ்டாலினுக்கு ஆதரவாக உள்ள பொன்முடி, எவ வேலு, தாமோ.அன்பரசன்  போன்ற சீனியர்களை வைத்து உதயநிதியை உள்ளே இழுக்கும் வேலைக்கு அச்சாரம் போட்டு இருக்கிறார். பல சீனியர்களின் மகன்கள் கட்சிக்காக இளம் வயது முதலே பங்களிப்பு அளித்து வந்த நிலையில், திடீரென உதயநிதியை சினிமா பிரபலம் ஆக நடிக்க வைத்து, அரசியலில் நுழைத்து முக்கிய பதவியை வழங்குவது, திமுக எதிர்காலத்திற்கு நல்லதல்ல என சீனியர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு பதவி கொடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால் தலைவரின் மகன், கலைஞரின் பேரன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்தே தீரவேண்டும். என் மகன் கட்சிக்குள் இருக்க வேண்டும் என துர்கா ஸ்டாலின் நேரடியாகவே திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அழைத்துப் பேசியிருக்கிறார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தலைமையை எதிர்த்து எதுவும் பேசமுடியாத கையறு நிலையில், தங்கள் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளிடம், உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக பதவி ஏற்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வலியுறுத்தி உள்ளார்கள். 

இதனை அடுத்து திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் கூட இல்லையே, குடும்ப சர்வாதிகாரமாக இருக்கிறதே என்று பலர் குமுறி வந்தாலும், கட்சித் தலைமையை எதிர்த்துப் பேசினால் தங்களுக்கு கட்சியில் எதிர்காலம் இல்லை என்பதால் அனைவரும் மௌனமாகவே வலம் வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்து, ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறாரோ, இல்லையோ, உதயநிதி ஸ்டாலின் கட்சியின் அடுத்த முக்கிய தலைமையாக வரவேண்டும், அவர் முன்னிலைப்படுத்தபட வேண்டும் என்ற ஒரே  இலக்கில் செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk planned give post to udhayanithi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->