திமுகவில் நிர்வாகிகளுக்கு மிரட்டலா?! அதிர்ச்சியில் மாவட்ட செயலாளர்கள்! வெளியான பகீர் தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியானது பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியாக தான் அனைவருக்கும் தெரியும். கட்சி தலைவர் பெரியார் தான் என்றும் அதனால் நான் பொதுச்செயலாளர் ஆகவே இருப்பேன் எனவும் திமுகவின் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தினார். 

சுமார் 19 வருடங்கள் அரசியல் போராட்டங்கள் அனைத்தையும் கடந்து 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம், தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு, ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அதுவரை திமுகவை அறிஞர் அண்ணாவே வழிநடத்தி வந்தார். ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணா அடுத்த இரண்டு ஆண்டுகளில் உடல்நிலை குறைவால் மறைந்துபோக அடுத்து திமுகவையும் ஆட்சியையும் யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ, அதுவரை முன்னிலையில் இல்லாமல் இருந்த கலைஞர் கருணாநிதி முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் ஐ பயன்படுத்தி சாதுரியமாக கட்சியையும், ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 

அதுமுதல் கட்சியானது கலைஞர் கருணாநிதியின் கீழ் செயல்படத் துவங்கியது. 1969 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் கலைஞர் கருணாநிதி மறைந்த வரை அந்த கட்சியின் தலைவராக கருணாநிதி நீடித்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தற்போது தலைவராக இருந்து வருகிறார்.

கலைஞருக்குப் பின் யார்? என்ற போட்டியில் கலைஞர் குடும்பத்தினர் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஏனெனில் அந்த இடத்திற்கு கலைஞரின் மூத்த மகன் மு க அழகிரியும், அதேபோல கலைஞரின் அக்கா பேரன்கள் மாறன் சகோதரர்களும், கலைஞரின் மகள் கனிமொழியும் போட்டியிட்டனர். இதில் முதலில் மாறன் சகோதரர்களை கட்சியிலிருந்து ஓரங்கட்டி கலைஞர் காலத்திலேயே தன்னுடைய மகன்களுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் மூத்த மகன் அழகிரியை கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலினுக்கான  வழியை எளிதாக்கினார். 

பின்னர் எவ்வித முடிவும் ஏற்படாமல் கலைஞர் மறைந்துபோக, கனிமொழி ஸ்டாலின் கீழ் செயல்படுவது என ஒதுங்கிக் கொண்டார். இரண்டாவது தலைமுறையாக கலைஞர் குடும்பத்தில் இருக்கும் கட்சியினை அடுத்து மூன்றாவது தலைமுறையாக யார் வழி நடத்துவது? என்ற கேள்வி அனைவருக்கும எழுந்த நிலையில் அந்த இடத்தினை பூர்த்தி செய்வதற்காக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி உள்ளார்கள். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அந்த இடத்திற்கு கனிமொழியோ அல்லது தயாநிதி மாறனோ வந்துவிடக்கூடாது என்பதால் உதயநிதியை வேகம் வேகமாக உள்ளே இழுக்கும் வேளையில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.  

ஸ்டாலினை கலைஞர் அரசியலில் அறிமுகப்படுத்த ஸ்டாலினின் இளம் வயது முதலான அரசியல் பயணம் பெரிதும் கை கொடுத்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அவ்வாறான எந்தப் பின்புலமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவரை மக்களுக்கு எப்படியாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடிப்பே வரவில்லை என்றாலும் அவருடைய சொந்த தயாரிப்பிலேயே நடிகராக நடிக்க வைத்து மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். 

மேலும் அரசியலில் அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும் என அவருடைய நண்பராக வளர்க்கப்பட்டவர், தற்போதைய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி துணை செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சந்தித்த பிறகு தான் இன்று பல மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினை சந்திக்க முடியும் என்ற நிலைதான் கட்சியில் நிலவுகிறது. 

உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலுக்காக திட்டமிட்டு களத்தில் இறக்கப்பட்டதாக மட்டுமே வேண்டுமானால் தெரியலாம். ஆனால் அவரை உள்ளே இறக்க வேண்டும் என ஸ்டாலின் மனைவி துர்கா எப்பொழுதே முடிவு செய்துவிட்டார். அதற்கு ஏற்றார் போல் சில மாவட்ட செயலாளர்களை அழைத்து துர்கா ஸ்டாலின் உதயநிதியை தங்களது மாவட்ட கூட்டங்களில் முன்னிறுத்தி கலந்துகொள்ள செய்யும்படி செய்தார். 

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், திமுகவின் வழக்கமாக பிரச்சாரம் செய்யும் முன்னணி பேச்சாளர்கள் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, உதயநிதி ஸ்டாலினை மட்டும் முன்னிலைப்படுத்தி திமுக பிரச்சாரம் மேற்கொண்டது. மேலும் ஏற்கனவே பலமாக கவனிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்டு வைத்திருந்த சில தனியார் ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் அதற்கு உதவியாக திமுக பயன்படுத்திக்கொண்டது. 

மேலும் நாடு முழுவதும் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற, தமிழகத்தில் திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தினால் தான் பெறப்பட்டது என்று சில ஊடகவியலாளர்களை கொண்டும், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்ற போர்வையில் இருக்கும் திமுக ஆதரவாளர்களை வைத்து திமுக கட்டமைத்து வருகிறது. ஆயினும் மக்கள் வாக்களித்தது என்னவோ? திமுகவின் செயல்படுத்த முடியாத அறிவிப்புகள் ஆன, விவசாய கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து போன்ற சாத்தியமற்ற அறிவிப்புகளால் தான் வாக்களித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இதனை வைத்து உதயநிதியை உள்ளே கொண்டுவர வேண்டும் என்பது ஸ்டாலின் மற்றும் துர்காவின் எண்ணமாக இருக்கிறது. 

திமுகவைப் பொறுத்தவரை தகுதி இருக்கிறதோ, இல்லையோ தலைமையை நெருங்கி, பணிவாக நடந்து கொண்டால், நம்முடைய பதவிக்கு எவ்வித சிக்கலும் வராது என்று கணக்கு போட்டுள்ளனர். பல மாவட்ட செயலாளர்கள் இப்பொழுது ஸ்டாலினின் மனைவி துர்காவின் சொல்லுக்கு அடிபணிய ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சொல்வதை தட்டாமல் செய்தும் வருகிறார்கள். அவர்களை கொண்டேதான் துர்கா தொடர்ந்து காய் நகர்த்துகிறார்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் தலைவரின் மகன், அவரை பகைத்துக் கொள்ளாமல் நாம் ஆதரவு கரம் நீட்டினால் நம்முடைய பதவிக்கு எதிர்காலத்தில் எவ்வித ஆபத்தும் வராது என சில நிர்வாகிகள் தானாகவே உதயநிதி பின்னால் போய் நிற்கிறார்கள். ஆனால் சில நிர்வாகிகள் எப்படி இப்போது வந்த பையன் பின்னால் சென்று நிற்பது, அவருடைய பேச்சைக் கேட்பது என்று தயங்கி நிற்க, அந்த நிர்வாகிகளை எல்லாம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்று, கடிதங்கள் எழுத சொல்லி திமுக தலைமையில் இருந்து மிரட்டல் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வேறு வழியின்றி அனைத்து நிர்வாகிகளும் கடிதங்களை கட்டாயத்தின் பேரில், வற்புறுத்தலின் பேரில் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே நிர்வாகியின் பெயரில் எழுதியும் கொள்கிறார்கள். ஏற்கனவே திட்டமிடப்பட்டு வைத்திருந்த சில தனியார் ஊடகங்களும், திமுக ஆதரவு ஊடகவியலாளர்களையும் வைத்து இதனையே மிகப் பெரிய செய்தியாக வரவைக்கும் வேளையும் கனகச்சிதமாக நடைபெற்று வருகிறது. உதயநிதியை உள்ளே கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஊடக நிறுவனங்களும் அவருக்கு திராவிட இளவரசர், மூன்றாம் கலைஞர் என பட்டங்களை வழங்கி திமுக தலைமையை திருப்தி படுத்துகிறார்கள். 

கடந்த 2014  ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின், எனக்கு பின்னால் என்னுடைய மருமகனோ என்னுடைய மகனோ  யாரும் அரசியலில் இருக்கமாட்டார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், மேலும் ஸ்டாலினின் தந்தையான கலைஞர் கருணாநிதியும் இது என்ன சங்கர மடமா? வாரிசுகள் வரிசையாக வர என கேட்டிருந்த நிலையிலும், ஸ்டாலினின் வாரிசை உள்ளே கொண்டுவருவதற்காக காலங்காலமாக கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளை மிரட்டுவது திமுக உறுப்பினர்களுக்கு வேதனையை தந்துள்ளது. ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் இந்த நாட்டில் மன்னர் ஆட்சி படி கட்சி நடப்பதெல்லாம் வேதனை அளிக்கும் தானே. 
 
உதயநிதி என்ன அவருடைய மகன் இன்பநிதியே வந்தாலும் அவர் பின்னால் நிற்பார்கள் அவர்கள் தான் உண்மையான உடன்பிறப்புகள் என்கிறார்கள் இணையதளவாசிகள். அவ்வாறு நிற்பவர்கள் உடன்பிறப்புகள் அல்ல கொத்தடிமைகள் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk plan give party post to udhayanidhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->