இந்த தீபாவளிக்கு உபிஸ்களுக்கு போனஸ் இது தானா.?! திமுக தலைவர்களால் படுகுஷியில் உடன்பிறப்புகள்.!  - Seithipunal
Seithipunal


திமுகவைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பு என்று கூறி தான் தங்களது அரசியலை ஆரம்பித்தனர். இருப்பினும், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் திமுக இந்துக்கள் பண்டிகைகள் மட்டும் வாழ்த்து கூறாமல் ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு அப்போதைய திமுகவின் பொருளாளராக இருந்த முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த பதிவு போடபட்டு இருந்தது. பெரும் பிரச்சனைகளுக்கு பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. அதுபோல இந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் படத்தை பதிவிட்ட விவகாரம் தீயாக பற்றி எரிந்தது. அதன்பின்னர் உதயநிதி அதற்கு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதும், அதன்பின்னர் அதை மறுத்து விளக்கம் அளிப்பதும் திமுகவின் வழக்கமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் தீபாவளிக்கு திமுக தலைவர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தீபாவளிக்கு வெட்டவெளிச்சமாக வாழ்த்துக் கூறி இருப்பது புதிய மாறுதலாக உள்ளது. 

அதிலும் அவர்கள் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு அவர்கள் தங்கள் தொகுதி நிர்வாகிகளுக்கு புது துணி எடுத்துக் கொடுத்து, நிதி உதவியும் அளித்து தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு மற்றும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், கலைஞர் டிவியில் எப்போதும் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒலிக்கும் குரல் தற்போது தீப ஒளி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒலித்தது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. 

அரசியலுக்காக திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா? சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்துக்களின் வாக்குகளை பெற திமுக முயல்கிறதா என்று பலரும் விவாதித்தாலும் கூட உடன்பிறப்புகள் தங்களுக்கு கிடைத்த தீபாவளி போனசாக இந்த வாழ்த்துக்களை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk got changes from diwali


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->