பிரசாந்த் கிஷோர் வியூகத்தை உடைத்து நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்.?! திகைப்பில் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு நடைபெற்றது. எனவே, காங்கிரசின் நெருக்கடிக்கு பணிந்து 63 தொகுதிகளை கலைஞர் வாரி வழங்கினார். 

அதன் பின்னர் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்கள் வரவில்லை ஆகவே காங்கிரசுக்கு 41 தொகுதிகளை கலைஞர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கடுமையான தோல்வியைச் சந்தித்தனர். திமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளில் அதிக தொகுதிகளை வென்றது.

சமீபத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் கண்டது. 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வெறும் 19 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் மற்ற இடங்களில் மண்ணை கவ்வியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் அபார வெற்றி பெற்று அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் உருவெடுத்தது. 

காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட 70 தொகுதிகளை ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்டிருந்தால், மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது. காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை மாநில காட்சிகள் கொடுப்பது தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம் என்று பல விமர்சனங்கள் எழுந்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் 20 தொகுதிகள் கூட காங்கிரசுக்கு கொடுக்கக் கூடாது என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 21 தொகுதிகள் தான் காங்கிரசுக்கு என்று திமுக முடிவெடுத்து விட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குண்டுராவ் அளித்த பேட்டியில், "பீகார் நிலவரம் வேறு. தமிழகத்தின் நிலவரம் வேறு. பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழகத்தின் 100 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு உதவியாக இருக்கும்." என்று மறைமுகமாக நெருக்கடி கொடுத்துள்ளார். 20 தொகுதிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாது என்றும், திமுகவை இந்த முறையும் நெருக்கடிக்கு தள்ள காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress secret plan about tn election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->