ஸ்டாலின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட பிளான்.. சூடுபிடிக்கும் வழக்கு.. விரைவில் கைது? - Seithipunal
Seithipunal


இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் திமுக, காங்கிரஸ் கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராகவும் மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வந்தது. 

தற்போது பாராளுமன்றத்தில் அதிக அளவில் எம்பிகளை வைத்திருப்பதால் திமுக தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவும், அடையாளப்படுத்திக்கொள்ளவும் செயல்பட்டு வருவதாக அரசியல்வாதிகள் கூறுகின்றனர். தற்போது பாஜகவை கோவப்படுத்தும் வகையிலே திமுகவின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போதே பஞ்சமி நில விவகாரத்தில் மு க ஸ்டாலின் ஆஜராகும்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முரசொலி விவகாரத்தில் தனது வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்த, ஸ்டாலின் தற்போது உரிய ஆவணங்களுடன் டெல்லியில் ஆஜராக வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் வைத்தே ஸ்டாலினின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. 2ஜி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கனிமொழி, ராசாவையும் வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் சூடுபிடிக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp new plan for mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->