நேரடியாக களத்தில் இறங்கும் பாஜக.. திமுகவிக்கு ஸ்கெட்ச்.. தமிழகத்தில் தாமரை மலருமோ?! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு தான் ஜெயிப்பதை விட திமுக ஜெயித்து விடக்கூடாது, ஸ்டாலின் முதல்வராக கூடாது என்பதில் அதிக ஆர்வம் இருக்கின்றது. அதே நேரத்தில் கூட்டணியில் இருக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. தனித்து நின்றால் 60 இடங்களில் பாஜக அசால்டாக வெற்றி பெறும், ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று எல் முருகன் கருத்து தெரிவித்தது பல்வேறு விமர்சனங்களை பெற்றது. 

அதேசமயம், பாஜக தனித்து நிற்பதாக ஓரளவுக்கு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ரஜினியை விட்டுவிட அவர்களுக்கு எண்ணம் இல்லை. ரஜினி தேர்தலில் போட்டியிட்டாலும், கட்சி ஆரம்பித்தாலும் அவரை கூட்டணிக்கு அழைக்க தயாராக உள்ளது பாஜக. திமுகவிடம் சுவர் விளம்பரங்களில் பிரச்சனை ஏற்பட்டு அடிதடி மோதல் வரை சென்றது. 

திமுக வட்ட செயலாளர் பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீது பைக் மோதிய பிரச்சனைகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது. மதுரையில் சுவர் விளம்பரத்தில் எப்பொழுதும் அதிமுகதான் முந்தும். ஆனால், தற்போது பாஜக முந்திக்கொண்டு சுவர் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டது, அதிமுகவிற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பேசுகையில் கடைக்காரர்களுக்கு திமுகவினர் பாதுகாப்பு இல்லை. போலீசாரும் திமுகவினரால் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஏராளமான பகுதியில் தற்போது பாஜக கொடி பறக்கிறது. இதைக்கண்டு திமுக பயப்படுகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. இது பழைய பாஜக இல்லை, பாஜக 2.0 என்று தெரிவித்துள்ளார். 

திமுகவில் இருந்து வெளியேறும் பலரும் அதிமுகவிற்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது பாஜக பக்கம் சாய்வது மேலும் பலத்தை பாஜகவுக்கு அளிக்கிறது. முன்னதாக டிபி துரைசாமி திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும் என்றும், திமுகவிற்கு பாஜக தான் போட்டி என்றும், மொத்தமாக அதிமுகவை ஒதுக்கி பேசியது பாஜக தமிழகத்தில் வளர்ந்து விட்டதற்கான அறிகுறியா? என்ற சந்தேகத்தை எழுப்பிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp may won in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->