முக்கிய தலைவரின் வீட்டுக்கு செல்லும் அமித்ஷா.?! உறுதியாகும் கூட்டணி.?!  - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்து சேர்ந்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த அவரை வரவேற்க முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் பாஜக தலைவர் வேல்முருகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றனர். 

தற்போது மாபெரும் மாநாட்டில் உரையாற்றிய கொண்டு இருக்கும் அமித்ஷா தான் இன்றைய ஹாட் டாபிக். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தது. அந்தவகையில் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிமுக பாஜக கூட்டணியை இன்று முதல்வர் உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்தை அமித்ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேப்டனின் வீடு தேடி சென்று அமித்ஷா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று இரவு அல்லது நாளை காலை விஜயகாந்தை அமித்ஷா சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடைபெற்றால் பாஜக கூட்டணியில் தேமுதிக இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amith shah may meet vijayakanth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->