அதிமுகவில் தயாராகும் அடுத்த கூடாரம்.! டென்ட் போட தயாராக அமைச்சர்கள்.. பின்னாலேயே தேடி வரும் ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தினை உடுமலை இராதாகிருஷ்ணன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் முதல்வருக்கு இரண்டு கரங்கள் போன்றவர் ஆவர். 

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் டெல்லி நெருக்கடி என்று எந்த பிரச்சனையாக இருந்தாலும்., அதனை சமாளித்து ஆட்சியினை சுமூகமாக நடத்துவதற்கு இவர்கள் இருவரும் முக்கிய காரணம் ஆகும். இவர்களை தவிர்த்து தற்போது அமைச்சர் ஜெய்குமாரும் முதமைச்சருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும்., அரசு விவாகரத்தை தீர்ப்பதற்கு ஜெயக்குமாரை முதலமைச்சர் உபயோகம் செய்து கொள்வதாகவும் தெரிகிறது. 

admk, admk minister, minister thangamani, minister sp velumani, minister thangamani with velumani,

மேலும்., கட்சி தொடர்பான பிரச்சனைகளில் ஜெயக்குமாரை தலையிட முதல்வர் அனுமதி வழங்குவதில்லை என்றும்., கட்சி மற்றும் அரசியல் குறித்த பிரச்சனைகளுக்கு முடிவெடுப்பதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் தங்கமணி இருக்கின்றனர் என்றும்., இது அனைவருக்கும் தெரியும் என்றும் தெரியவருகிறது. 

இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் இந்த பட்டியலில் தற்போது புதியதாக அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளதாகவும்., கால்நடை பரம்பரிப்புத்துறை அமைச்சராக இருந்த உடுமலை இராதாகிருஷ்ணனை தமிழ்நாடு கேபிள் டி.வி. அமைப்பின் தலைவராகவும் முதல்வர் நியமனம் செய்திருந்தார். மேலும்., தமிழக அரசு மதுபான கடை வருமானத்திற்கு பின்னர்., அதிகளவு வருமானம் வருவது தமிழ்நாடு கேபிள் டிவி அமைப்பாகும். 

இதுமட்டுமல்லாது தமிழகத்தில் இயங்கி வரும் பிற தொலைக்காட்சி மற்றும் செய்தி தொலைக்காட்சிகளை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என்பதை நினைவில் கொண்டு., இப்படிப்பட்ட துறைக்கு அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணனை நியமனம் செய்துள்ளதை சிந்தித்து பாருங்கள். இந்த சமயத்தில்., இந்த பதவி உயர்வின் காரணமாக அமைச்சர் மணிகண்டன் ஆத்திரத்திற்கு உள்ளானார். 

admk, admk ex minister manikandan, admk manikandan,

இதனையடுத்து உடுமலை இராதாகிருஷ்ணன் தற்போது நடத்தி வரும் அட்சயா கேபிள் குறித்த தகவலை அமைச்சர் மணிகண்டன் வெளியிடவே., இது பெரும் எரிச்சலை உடுமலை இராதாகிருஷ்ணனிற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்விற்கு பிறகு மணிகண்டன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும்., எடப்பாடி பழனிசாமி முதலைச்சரான பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் மட்டும் தான்.

இந்த பதவி பரிப்பிற்கு அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணின் மோதல் விவகாரத்தால் ஏற்பட்டுள்ளது என்றும்., இந்தளவு பின் விளைவை ஏற்படுத்தும் வகையில் உடுமலை இராதாகிருஷ்ணன் முதல்வருடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும்., விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்பை அமைச்சர் சி.வி.சண்முகம் கவனித்து வந்த நிலையில்., அவரின் தங்கை மகன் தற்கொலைக்கு பின்னர்., இந்த பொறுப்பு உடுமலை இராதாகிருஷ்ணனிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk minister udumalai radhakrishnan third member of cm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->