மீண்டும் சொந்தக்கட்சியில் இணையும் பிரபல நடிகை.! தயாராகும் கட்சியினர்., ஆரவாரத்திற்கு ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்து வந்த பிரபல நடிகை விஜயசாந்தி. இவர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அடுத்துவரவுள்ள தசரா பண்டிகையின் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது., நட்சத்திர பிரமுகராக இணைந்து., பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும்., நடிகையான விஜயசாந்தி தென் மாநிலங்களை பொறுத்த வரையில் பிரபலமான நடிகை என்பதால்., இது பாரதிய ஜனதா கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதுமட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில்., சுமார் 15 தொகுதிகள் முதல் 20 தொகுதிகள் வரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாகவும்., தெலுங்கானா மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்., நடிகை விஜயலட்சுமிக்கு அதிகளவு செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

vijayalatsumi, விஜயலட்சுமி,

மேலும்., தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் திட்டப்படி., பிரமாண்ட பொதுக்கூட்டமொன்று நடத்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., தற்போது நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதா கட்சியில் இணைவாரா? அல்லது பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் இணைவாரா? என்று முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேலும்., கடந்த 15 நாட்களாகவே இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்., இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., கடந்த 1998 ஆம் வருடத்தில் பாஜகவில் இணைந்த விஜயசாந்தி., 2014 ஆம் வருடத்தின் போது காங்கிரசில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress viayalatsumi join bjp form dasara


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->