மீண்டும் வைரலாகும் ராமராஜன் வீடியோ! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 90 களின் ஆரம்பத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் ராமராஜன். திரைத்துறை தாண்டி அரசியலிலும் சாதித்த அவர் நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஆனார். இந்த நிலையில் ராமராஜன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்ற தகவலுடன் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோ  முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருடைய பெயர் ராமராஜன் என்பதற்கு பதில் நாமராஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தினை மாற்றியவர் பெயரையும் மாற்றிவிட்டார் போல.. 

அந்த வீடியோவில் அவர் பேசும்போது, கரக்காட்டக்காரன் படத்துல மாங்குயிலே பூங்குயிலேன்னு பாடியவன், கோயம்பத்தூரில் வந்து இயேசுன்னு பேசுறான்னு நினைக்கலாம். வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான்  திரையரங்கில் வேலை பார்த்து, சென்னை வந்து பிரபல நடிகராக ஆனேன். அரசியலில் ஈடுபட்டு எம்பி கூட ஆனேன். 

எல்லாம் சரியாக சென்ற போது அந்த துயர சம்பவம் நடைபெற்றது. 2010ல் ஒரு மிகப்பெரிய கார் விபத்து. அந்த விபத்தில் எனது நண்பர் அங்கேயே இறந்துவிட்டார். நான் கிட்டதட்ட 15 நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். இவர் பிழைப்பாரா பேசுவாரா, பழைய நினைவு வருமா என்று என்று எல்லோரும் பேசியது எனக்கு பிறகுதான் தெரியும். எனது நண்பர் பால் தங்கராஜ் இயேசுவை வழிபடக்கூடியவர்.

அவர் ஒரு பாஸ்டரை கூட்டிட்டு வர, அவர் என் தலையில் கை வைத்து ஜபம் செய்த போது, எனக்கு இயேசுவே என் தலையில் கையை வைத்து பார்த்த மாதிரி இருந்தது, இன்றைக்கு நான் நல்லா இருக்கேன் என்றால் அதற்கு கர்த்தர் தான் காரணம் என பேசியுள்ளார்.

உண்மையில் பேசியது ராமராஜன் தானா? என விசாரித்தால், அவர் பேசியது உண்மைதான் எனவும், அவர் மதம் மாறவில்லை எனவும், எனக்காக ஜபம் செய்த நண்பர்கள் அழைத்ததால் கலந்து கொண்டேன் எனவும், இது 2014 இல் உருவான வதந்தி எனவும் அவரே அப்போது தெரிவித்துள்ளார். இருப்பினும் இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ramarajan changed his name


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->