கடைசியில் இப்படி ஆயிடுச்சே குமாரு.. ஸ்டாலினுக்கு போடப்பட்ட பெரிய முட்டுக்கட்டை! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று டெல்லி மாநில முதல்வராக 3-வது முறையாகப் பொறுப்பேற்க  இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் தலைவர்களையும், பிற மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக 8 இடங்களை வென்றது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.

இந்நிலையில் டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் நிலையில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், பிற மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் முதலமைச்சராக வந்து பதவி ஏற்க முடியவில்லை என்றாலும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பாஜக அல்லாத எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.  மத்திய பிரதேசம் கமலநாத், ராஜஸ்தான் அசோக் கெலாட், ஆந்திரப்பிரதேசம் ஜெகன்மோகன் ரெட்டி, மஹாராஷ்ட்ரா உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் ஹேமந்த் சோரன் என பலரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வந்த ஸ்டாலின், டெல்லி மாநில முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் தேசிய அளவில் ஒரு தலைவராக ஸ்டாலின் கலந்து கொள்வார் என திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஆவலாக பேசி வந்தார்கள்.

அதற்கேற்றார்போல வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தொண்டர்களின் ஆவலுக்கு அவல் போடும்விதமாக ஒரு அறிவிப்பை ஆம் ஆத்மீ வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட யாரையுமே அழைக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது. இந்த முடிவானது திமுக தலைமைக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAM Admi Party does not invite any other party leaders for oath


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->