ரூ.56,100 சம்பளத்தில் மருத்துவமனையில் பணி - நெருங்கும் கடைசி தேதி : விண்ணப்பிக்கும் வழிமுறை..! - Seithipunal
Seithipunal


புதுதில்லியிலுள்ள VMMC மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பணியின் பெயர்: Junior Resident (Non-PG)


காலியிடங்கள்: 310 (UR-147, EWS-40, OBC-66, SC-37, ST-20)


சம்பளம்: ரூ.56,100


கல்வித்தகுதி: MBBS பட்டப்படிப்புடன் தில்லி Medical Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. (EWS/ OBC பிரிவினர்களுக்கு ரூ.250) இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். செலுத்திய உடன் விண்ணப்பக் கட்டண ரசீதை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.vmmc-sjh.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டண ரசீது மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: Senior Administrative Officer, Academic Section(Dairy & Dispatch Section), Safdarjung Hospital & VMMC, New Delhi - 110 029.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 21.5.2019.மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

English Summary

VMMC hospital job


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal