பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து.. யுஜிசி பரிந்துரை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 472,985 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,907 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 271,688 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு தேர்வுகள், பொதுத் தேர்வுகள்  மற்றும் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் குறிப்பிட மாநிலங்களில் மாணவர்களின் தேர்ச்சி என அறிவித்தனர். அதேபோல் ஒரு சில பல்கலைக்கழகத்திலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் முதல், இரண்டாமாண்டு, இறுதியாண்டு தேர்வு ரத்து என புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி குறித்து முடிவு எடுக்கலாம். புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை அக்டோபர் மாதத்திற்கு முன்பாக தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

university semester exam may be cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->