தஞ்சாவூர் இளைஞர்களே தயாரா.! நாளை(19.01.2023) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, நாளை முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

கல்வி தகுதி:

•8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை

•டிப்ளமோ

•ஐ.டி.ஐ.

•பட்டதாரிகள்

•இந்த முகாமில் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். 

மேலும் முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் பயோடேட்டா, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Private sector employment camp in Thanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->