தமிழகத்தில் 10 மாத ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வந்தது. அதன்படி கடந்த 6,7 மற்றும் 8 தேதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பெரும்பாலான பெற்றோர் பாக்கிகள் திறக்க ஆதரவு தெரிவித்ததை அடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து வைத்துள்ளனர்.

மேலும், 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். 10, 12ஆம் வகுப்புகளுக்கு இன்று  முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today school reopen in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->