TNPSC அசத்தல் அறிவிப்பு.! தமிழ் தெரியலையா கெட்டவுட்டு.! தமிழனுக்கு தான் கட்டவுட்டு.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ உள்ளிட்ட 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி வரும் நாட்களில் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் பொது தமிழ் நீக்கப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். 

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் என விளக்கம் கொடுத்து அதற்கு அறிக்கை விடுத்தது ஆதரவு தெரிவித்துள்ளார். 

இன்று, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், செய்தியாளர்களிடம் பேசிய போது, "முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த காரணத்தால் தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டு இருக்கின்றது. குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது. 

இதனால், இனி குரூப் 2 தேர்வில் கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெற முடியும். குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழ் தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று எளிதில் அரசு பணிக்கு செல்லலாம். ஆனால், இனி அவ்வாறு முடியாது. தமிழ் தெரிந்தால் மட்டும் தான் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெற முடியும்." என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc new announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->