கேள்விக்குறியான 5177 மாணவர்களின் தேர்வு முடிவுகள்.! குழப்பத்திற்கு விளக்கமளித்த தேர்வுத்துறை இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்தது. கொரோனா பேரிடர் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே, பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில்,  பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 

இன்று வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ, மாணவிகளில், 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலமாக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனிடையே, தற்போது வெளியான முடிவுகளில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட 5 ஆயிரத்து 177 மாணவர்களின் நிலை என்ன ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த ஜூலை 4ஆம் தேதி அப்போதைய தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி பிறப்பித்த உத்தரவில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் அவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள கல்வியாளர்கள், தேர்வுத்துறை இது குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்கம் விளக்கமளித்துள்ளது, அதில், 5 ஆயிரத்து 748 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை, அதாவது, தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களின் எண்ணிக்கை 4,359, பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தபின் காலமான மாணவர்களின் எண்ணிக்கை 231 மற்றும் டிசி பெற்று இடைநின்ற மாணவர்கள் எண்ணிக்கை 658, பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 77 அதில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 39 ஆயிரத்து 829, இயற்கை எய்திய மாணவர்களுக்கு தேர்வு முடிவு  வெளியிடப்படவில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை என அறிவிப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn exam exam committee explain for tenth result


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->