20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் தமிழக ஆளுநர் உரையின் போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி என்று வெளியிட்டுள்ளார்

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தமிழக முதல்வர் இதனை வெளியிட்டுள்ளார். மேலும், 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழில் பேட்டைகளை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து உள்ளார்.

மேலும், 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் சுமார் 68 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பேசியதாவது, "சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்படும். முதலீட்டு மானியமும் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.5 கோடி யாக வழங்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ஒரு பணியாளருக்கு 24,000 ரூபாய் மானியமாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

புதிய தொழில் கொள்கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும். வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்படுத்துள்ளது." என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Announce for 20laks jobs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->