கொரோனா எதிரொலி: தமிழகத்தில் தேர்வு நடைபெறாமலே 9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சியா? - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆனது, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலங்களாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் மகாராஷ்டிராவிலும் அதிகபடியான நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  துரித படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநில அரசுகளை நம்பாமல் மத்திய அரசே களமிறங்கி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், நிச்சல் குளங்கள் என அனைத்தையும் 31ம் தேதி வரை மூடி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொது தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோன அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றவர்களாக நேற்று அறிவிப்பை வெளியிட்டது.  பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளதாக அந்த மாநில அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த நிலையில், உத்தரபிரதேச போலவே தமிழகத்திலும் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களையும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொது தேர்வில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teachers association request for students exam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->