ஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வு தேதி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


 தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. முதல் தாள் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை எழுதிய 1,53,533 தேர்வர்களில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் "2023 ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை உள்ள நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு இருந்து வாய்ப்புகள் வழங்கப்படும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher Eligibility Test Second Paper Exam Date Notification


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->