இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்த தமிழகம்.!  - Seithipunal
Seithipunal


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்திய உயர்கல்வித்துறை கணக்கெடுப்பில் வெளியான தகவல்களின்படி, தமிழகத்தில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் இந்தியாவிலேயே அதிகமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 5,844 நபர்கள், Ph.D எனப்படும் முனைவர் பட்டங்களைப் பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில்  Ph.D பட்டம் பெற்ற பெற்ற 5,844 பேரில் 2,976 பெண்களும், 2,868 ஆண்களும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு அடுத்ததாக கர்நாடகம் இரண்டாம் இடத்திலும், உத்திரப்பிரதேம் மாநிலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில அசாம் மாநிலமும், ஆந்திராவும் உள்ளன.

தமிழக உயர்கல்வித்துறையில் Ph.D. பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 36,000 ரூபாய் உதவித்தொகை வழங்கபப்ட்டு வந்தது, இந்த உதவி தொகையை 60,000 ரூபாயாக உயர்த்தி தமிழக உயர்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் Ph.D., ஆய்வுக்கட்டுரைகளைக் கண்காணிக்க தனிக்குழுவை அமைத்து Ph.D., படிப்பின் தரத்தை அதிகப்படுத்தியதும், Ph.D., யில் குறுகிய காலத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்குக் காரணம் என தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49 விழுக்காடாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first place in phd holder


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->