இந்த கல்லூரிகளில் எல்லாம் படிச்சா அவ்ளோ தான்!! மாணவர்களே உஷார்!!  - Seithipunal
Seithipunal


பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிய பல்கலைக்கழகம் ஆகிய பல்கலை கழகங்கள் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி, எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள் நிகரானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோலவே, அரசு வேலைபெற தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகளுக்கு நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்ட  படிப்புகளை கருத முடியாது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியானது அல்ல என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய பல்கலை கழகத்தின் கீழ் படிக்க முயலும் மாணவர்கள் அனைவரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student don't studied in this university


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->