பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! தமிழக அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவலானது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் 16ம் தேதி முதலே விடுமுறை அளித்த நிலையில் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தள்ளி வைப்பது குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி "கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27 - 3 - 2020 முதல் 13 - 4 - 2020 வரை நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும். 

இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு அதாவது 15 4 2020 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினொன்றாம் வகுப்பிற்கு 23 மற்றும் 26 தேதிகளில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC Exam Postponed due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->