7 மாவட்டங்களில் 6,673 நபர்களுக்கு புதிய வேலை.! உறுதியளித்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


ரூபாய் 6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. 
 
சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 6,608 கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த தொழில் திட்டங்களின் மூலமாக 6,673 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு உறுதியாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
மேலும் தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வேலூர் என தமிழகத்தின் பல மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six thousand new jobs tn government announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->