5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் செங்கோட்டையன்.! - Seithipunal
Seithipunal


பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளோம். 

மேலும், எந்த ஒரு மாணவரும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. 5 பேர், 8 பேர் ஒரு பள்ளியில் இருந்தாலும் அவர்களும் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்றார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அதில் எந்த அச்சமும் மாணவர்களுக்கு ஏற்படாது. பெற்றோர்களும், கல்வியாளர்களும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை.

5,8 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை சோதிக்கும் விதமாக இந்த பயிற்சியை கொடுப்பதற்காகவே பொதுத்தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengottaiyan says about 5th 8th public exam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->