கடும் வெயில் எதிரொலி.. 22ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருக்கிறது. மேலும் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேர் வெயிலின் தாக்கத்தால் பலியானார்கள். வெயிலின் தாக்கத்தால் இதுவரை 61 பேர் பலியாகியுள்ளனர். 

அவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். வெயில் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் வெயில் தாக்கம் குறையாததால் வருகிற 22-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் ஈடுபடக்கூடாது எனவும் திறந்தவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary

school holiday for 5 day in bihar


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal