மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழகத்தில் மீண்டும் ஆன்லைன் தேர்வு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இணையவழியில் அந்தந்தப் பாடங்களுக்கான அலகுல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, விடைத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு அனுப்பி மாணவர்களை  வீட்டிலிருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார். இதனால் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் அனுபவம் கிடைக்கும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school education dept plan for online exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->