சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் மேலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆசிரியர் பயிற்சி நடைபெற்று வருவதால், வருகின்ற 22.1.2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. 

கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு 31.1.2022 வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால், 22.1.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saturday school leave in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->