இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழங்கங்கள் அழைப்பு.! - Seithipunal
Seithipunal


உக்காரன்- ரஷ்யா போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்களை படிப்பதற்காக, ரஷ்ய நாடு தற்போது அழைத்துள்ளது.

ரஷ்ய நாட்டில் சிக்கித்தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது.

இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ படிப்புக்காக அந்த நாட்டுக்கு சென்று இருந்தனர். தற்போது உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக இவர்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருந்த நிலையில், உக்ரைன் பல்கலைக்கழகத்திலிருந்து நாடு திரும்பும் இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு, ரஷ்ய நாட்டின் பல்கலைக்கழகம் படிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், ரஷ்ய பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், 'கூடுதல் கட்டணம் இல்லாமல், நுழைவுத்தேர்வு எதுவும் இல்லாமலும் மாணவர்கள் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம்' என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, போலந்து ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இதேபோன்ற உதவிகளை அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian university call Ukraine Indian student


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->