உங்களது Resume-ல் இடம் பெற வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


பணியமர்த்தும் மேலாளர்கள் எப்பொழுதும் திறமை வாய்ந்தவர்களையும், கடின உழைப்பாளிகளையுமே தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அந்த வகையில் தான் உங்களது Resume அமைய வேண்டும்.

மேலும் உங்களது Resume தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். அதிக பட்சம் உங்களது Resume இரண்டு பக்கமே இருத்தல் வேண்டும்.

ஒரு வேளை உங்களது Resume-ல் பிழை இருந்தால் பணியமர்த்தும் மேலாளர்களுக்கு, உங்களுக்கு வேலை பெறுவதில் ஆர்வம் இல்லாதது போல் தோன்றும்.

எனவே Resume-ல் எழுத்துப் பிழையோ இலக்கணப் பிழையோ இல்லாமல் இருக்க வேண்டும்.

உங்கள் முந்தைய வேலைவாய்ப்பின் வேலை நிலையையோ (Job's Position) அல்லது கடமைகளையோ நீங்கள் உயர்வாகக் கூறக் கூடாது.

உங்களின் வேலையின்மை காலக்கட்டத்தை மறைக்கும் வகையில் நீங்கள் வேலை செய்த காலத்தை அதிகரித்து கூறாதீர்கள். 

ஒருவேளை நீங்கள் கூறுவது பொய் என்று அவர்களுக்கு தெரிந்தால் அந்த நிறுவனத்திற்கு உங்களின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடும். 

Resume-ல் எப்பொழுதும் உங்களது குறைகளை சுட்டிக்காட்டாதீர்கள்.  முடிந்தவரை உங்களின் Positiveness-யை மட்டுமே வலியுறுத்திக் கூறுங்கள்.

உங்களின் பெயர், வீட்டு முகவரி, ஒருவேளை நீங்கள் தற்காலிகமாக வெளியூரில் தங்கியிருந்தால் அந்த முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி(E-mali address) கட்டாயம் இருக்க வேண்டும்.

சுநளரஅந-ன் இறுதி பகுதியில் தங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் அல்லது உங்களின் Extracurricular activities போன்றவைகள் எல்லாம் குறிப்பிடுங்கள்.

ஒரு வேளை நீங்கள் பணியமர்த்தும் மேலாளர்களுக்கு இணையதளம் மூலம் Resume அனுப்புகிறீர்கள் என்றால், அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து பதில் வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resume


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->