1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை., அனைத்து பள்ளிகளும் திறப்பு.! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இடையிடையே நோய்த்தொற்று பரவல் குறையும் போது, ஒரு சில மாதங்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்தது.

இருந்த போதிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தினால்,  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க பஞ்சாப் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, "நோய்ப் பரவலின் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தொடங்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 

இதனை பள்ளிக்கல்வித்துறை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்." என்று பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjab school open aug


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->